குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று...
குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் நல்ல சமுகத்தில் வாழ்கின்றனரா என்று பார்க்க வேண்டும். குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன என்பதைப்பார்ப்போம்
- கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
- குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.
- தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.
- சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.
- குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.
- குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.
- குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
- உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.
- படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது நேர்சீராக இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் தான் டொக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய விளையாட்டு வீரனாகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.
- குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் புகை பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
குழந்தைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் கள்ளம் கபடமில்லாத உள்ளம், அவர்களின் பேச்சுவார்த்தைகள், அவர்கள் கேட்கும் கேள்விகள், ஆர்வம், மழலை மொழிகள், குண்டு கன்னங்கள், கைகள், காலகள், எப்போதுமே சிரித்த முகம், ஆரவாரம்.....
குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்:
- Bonding - பெற்றோருடன் அதிக ஒட்டுதல்
- Understanding - பெற்றோர்கள் குழந்தைகளை நன்கு புரிந்து கொள்வார்கள். புரிந்து கொண்டால் தான் அவர்களுக்குத் தேவையானதைச் செய்ய இயலும்
- Sharing of Experiences - குழந்தைகள் தனது அனுபவங்களைப் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும்.
- Passing of the Knowledge - பெற்றோர் தங்கள் அனுபவங்களையும் பாடங்களையும் குழந்தைகளுக்குக் கற்றுத் தர ஒரு சந்தர்ப்பமாக அமையும்
- Building Trust - குழந்தைகளுக்குத் தங்கள் பெற்றோரிடம் எந்த விஷயமானாலும் பேசலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்
- Self-esteem - தங்கள் பெற்றோரின் வாழ்வில் தாங்கள் ஒரு முக்கிய பகுதி என்பதை அறிந்து அவர்களுக்கு ஒரு சுயமதிப்பு ஏற்படும்
- பெற்றோர்களுடன் சிறு வயதில் அதிக நேரம் செலவழித்து நெருக்கம் பெற்ற குழந்தைகள், தங்கள் பதின்ம வயதுகளில் தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட உண்மையாகும்.
- Quality Time - நேரம் செலவழிப்பது என்பதை "தரமான நேரம்". ஏனோதானோவென்று குழந்தையுடன் இருப்பதை தரமான நேரம் என்று கருத இயலாது.
- Alone with and Interacting with the Child - குழந்தையுடன் தனியாக இருக்க வேண்டும் மற்றும் அவர்களோடு பழக வேண்டும். நீங்களும் குழந்தையும் ஒரு தனி இடத்தில் இருக்க வேண்டும். இன்னொன்று இருவரும் பேசிப் பழக வேண்டும் அப்போது தான் அது தரமான நேரமாகக் கருதப்படும். இதிலே ஒருமித்த நேரம் () என்றும், இணைந்து இருக்கும் நேரம் () என்று இருவகைகள் உண்டு.
- Focused Time - ஒருமித்த நேரம் என்பது, இருவரும் இணைந்து ஒரு முக்கியமான செயலைச் செய்வது.
- Hang around Time - இணைந்து இருக்கும் நேரம் என்பது இருவரும் சேர்ந்து ஏதாவது செய்வது. ஆனால் எந்த வகையில் நேரம் கழித்தாலும் உங்களது கவனம் 100% குழந்தையை நோக்கியதாக இருக்க வேண்டும்.
- Demonstrating love through Words and Actions - சொற்கள் மற்றும் செயல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்துவது. நீங்கள் இணைந்து இருக்கின்ற நேரத்தில் உங்களது சொற்கள் மற்றும் செயல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இங்கு சூழ்நிலை மற்றும் குழந்தையின் வயது ஆகியவற்றை மனதில் கொண்டு செய்யலாம்.
- Having a Special Impact - சிறப்பான தாக்கம் ஏற்படுத்த வேண்டும்.
- Connect Time - ஒருமிக்கும் நேரம். அதாவது நாம் குழந்தையை நீண்ட நேரம் பிரிவதற்கு சற்று முந்தைய நேரம் (நாம் அலுவலகம் செல்லும் போது அல்லது குழந்தை பள்ளிக்குச் செல்லும் போது), நீண்ட காலத்துக்குப் பின் மறுபடி காணும் நேரம் (அலுவலகத்திலிருந்து/பள்ளியிலிருந்து திரும்பிய நேரம்), இரவு படுக்கைக்குச் செல்லும் நேரம் போன்றவை. இந்த நேரங்களில் குறிப்பாக பெற்றோரின் அன்பும் கவனமும் கிடைக்கப்பெற்றால் குழந்தைகள் மிகவும் மனம் மகிழ்கிறார்கள். இது அவர்களின் மனதில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர்களின் பிறந்த நாள் அல்லது அவர்கள் மேடையில் கலைத் திறனை வெளிப்படுத்தும் நேரம் ஆகியவற்றின் போதும் பெற்றோர்கள் உடனிருப்பது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.
- Child Initiated and Child Sanctioned Activities - குழந்தைகள் விரும்பும் மற்றும் குழந்தைகள் ஆரம்பித்த வேலைகளின் போது. அதாவது குழந்தைக்குப் பிடித்தமான ஒரு வேலையின் போது நீங்கள் உடனிருந்தால் தான் அது தரமான நேரமாக கருதப்படும். ஒரு குழந்தைக்கு வீட்டுப் பாடம் செய்ய அவ்வளவாய்ப் பிடிக்காது எனும்போது வீட்டுப்பாடம் செய்ய நீங்கள் உதவினாலும் அது தரமான நேரமாக குழந்தைக்குத் தோன்றாது. அதற்குப் பிடிக்கிற ஒரு வேலையை அதற்கு அடுத்து அந்தக் குழந்தை செய்யும்போது நீங்கள் உடனிருந்தால் அது நன்று.
- Quantity of Time - தரம் முக்கியத்துவம் வாய்ந்ததே. குறிப்பாக குழந்தைகள் சிறிய வயதினராய் இருக்கும் போது மேலே குறிப்பிட்ட வகைகளில் அதிக நேரத்திற்கு அவர்களோடு பழகி இருக்க வேண்டியது மிக அவசியம். ஏனென்றால் சிறிய வயதில் அவர்களுக்கு உங்களின் அன்பும் கவனிப்பும் அதிகமாகத் தேவைப்படுகிறது. மேலும் சிறிய வயதிலே தான் உங்களாலும் அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்த இயலும்.
- குழந்தைகளோடு நெருக்கத்தை வளர்க்க உங்கள் வாழ்நாளில் ஏறக்குறைய அவர்களின் முதல் பதினைந்து வருடங்களுக்காவது அன்றாடம் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அது கண்டிப்பாக பின்னாட்களில் அதிகமான பலனை அளிக்கும்.
- குறிப்பாக அம்மாக்களின் கவனத்திற்கு, உங்கள் பிள்ளைகள் உங்களிடம் வளருவதைப்போல பிறரிடம் அன்பையோ அல்லது அரவணைப்பையோ பெறமாட்டார்கள். உங்களது இரண்டாவது தலைமுறை ஊதாரியாகிவிடும். தயவு செய்து உங்கள் செலவுகளை, ஆடம்பரங்களைக்குறைத்து உங்கள் செல்வங்களின் வாழ்வினை நெறிப்படுத்துங்கள்.